Search Blog

டிஷ் டிராக் ப்ரண்ட்ஸ் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் உடனுக்குடன் அனைத்து தொலைக்காட்சிகள் தொடர்பான தொழில்நுட்ப தகவல்களையும் தரும் முதன்மை தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்

Dec 14, 2015

பிரசார் பாரதி டிடி தொலைக்காட்சி ஒளிபரப்பு புதிய செயற்கைகோள் இன்சாட்4பி@93.5ல் ஆரம்பம்

நண்பர்களே இந்தியா அரசு பொது ஒளிபரப்பு தொலைக்காட்சி நிறுவனமான பிரசார் பாரதியின் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு புதிய செயற்கைகோளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தென்னிந்திய தொலைக்காட்சிகளான டிடி பொதிகை.டிடி மலையாளம்.டிடி யாதகிரி.டிடி சப்த கிரி.டிடி கன்னடா மற்றும் டிடி லக்னோ டிடி பீகார் போன்ற தொலைக்காட்சிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இத்தொலைக்காட்சிகள் அனைத்தும் கடந்த பல வருடங்களாக இன்சாட்3எ செயற்கைகோளின் முலம் ஒளிபரப்பை ஆசியா நாடுகளுக்கு ஒளிபரப்பாகி வந்தது.இனி வரும் காலங்களில் அனைத்து டிடி 
தொலைக்காட்சிகளும் இன்சாட்4பி செயற்கைகோளின் முலம் ஒளிபரப்பை வழங்கும். தொலைக்காட்சியின் அலைவரிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 8 முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.மேலும் முன்பு ஒளிபரப்பாகி வந்த MPEG2/DVB S1 தொழில்நுட்ப செட் டாப் பாக்ஸ்யில் காணலாம்.இம்மாற்றம் கேபிள் மற்றும் டிடி எச் ஆப்ரேட்டர்களுக்கு மட்டுமே.இந்தியாவை தவிர மாற்ற நாடுகளில் டிடி டிவியினை காண 10 மேற்பட்ட டிஷ் ஆன்டானவை பயன்படுத்த வேண்டும்.
ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் பொதிகை டிவியின் ஒளிபரப்பு ஆம்ஸ்5@17.0E செயற்கைகோளில் இருந்து ஆப்ரிக்காசாட்1எ@46.0Eக்கு கடந்த மாதத்தில் ஒளிபரப்பு மாற்றம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடதக்கது.
அலைவரிசை விபரங்கள்
Satellite                 Insat4B@93.5E(C-Band)
Freq Rate              4050
Symbol Rate         8600
Polar                     Horizontal
Modulation           Mpeg2/Dvb s
Mode                    FTA

Dec 8, 2015

இலங்கையின் முதல் தமிழ் ஹெச்டி தொலைக்காட்சியாக உதயம் டிவி(UDAYAM TV HD TAMIL) ஹெச்டி ஒளிபரப்பு விரைவில்

 நண்பர்களே இலங்கை நாட்டின் தமிழ் மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக திகழகூடிய பிரதான தமிழ் தொலைக்காட்சி வரிசையில் புதிய தொலைக்காட்சிகள்  கடந்த சில வருடங்களாக தொடங்கப்பட்டு வருகிறது.இலங்கை கிழக்கு மாகணாத்தை தலைமையிடமாக கொண்டு கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட தமிழ் தொலைக்காட்சியே உதயம் டிவி.இத்தொலைக்காட்சியின் பிரதான ஒளிபரப்பு எஸ்டி2


செயற்கைகோள் யுடாக சில மாதங்கள் இலங்கை மற்றும் ஆசியா நாடுகளுக்கு ஒளிபரப்பு வழங்கியது.பின்பு நாட்டில் நடைபெற்ற யுத்த நடவடிக்கைகளுக்கு பின்பு இடைநிறுத்தம் செய்யப்பட்டது.தற்சமயம் இலங்கையின் அதிநவின தொழில்நுட்பம் கொண்ட முதல் தமிழ் ஹெச்டி தொலைக்காட்சியாக உதயம் டிவி ஹெச்டி தொடங்கப்படவுள்ளது.இலங்கையில் தமிழ் தொலைக்காட்சிகள் அனைத்தும்
செயற்கைகோள் ஒளிபரப்பு அல்லாது தரைவழி மற்றும் இணையதளம் வயிலாக ஒளிபரப்பாகி வருகிறது.உதயம் டிவியின் பரிசார்ந்த ஒளிபரப்பு விரைவில் இலங்கையின் யுஹெச் எப் மற்றும் பியோ டிவி.டயலாக் டிவி போன்றவற்றின் முலம் தொடங்கப்படவுள்ளது.உதயம் டிவி இலங்கையின் பொழுதுபோக்கு தமிழ் ஹெச்டி தொலைக்காட்சியாக வலம் 
வரயிருக்கிறது.
உதயம் தொலைக்காட்சியின் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு விரைவில் தொடங்கலாம்.உலகில் வாழும் தமிழ் மக்களின் பொழுதுபோக்கு வரிசையில் அதிநவின தொழில்நுட்ப தொலைக்காட்சிகளை மலேசியா நாட்டில் ஆஸ்ட்ரோ விண்மீன் ஹெச்டி மற்றும் கனடா நாட்டில் மின்னல்டிவி ஒளிபரப்பாகி வருகிறது.இந்தியாவில் சன் டிவி குழுமம் மட்டும் ஹெச்டி தொலைக்காட்சிகளை ஒளிபரப்பி வருகிறது.

Dec 4, 2015

ஜெயா டிவி குழுமத்தின் தமிழ் தொலைக்காட்சிகள் இலவச ஒளிபரப்பு இன்டல்சாட்20யில்

நண்பர்களே தமிழகத்தின் முன்னனி தமிழ் தொலைக்காட்சியான ஜெயா டிவி குழுமத்தின் தொலைக்காட்சிகளான ஜெயா டிவி.ஜெயா ப்ளஸ்.ஜெயா மூவிஸ் மற்றும் ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சிகள் தற்காலிக இலவச ஒளிபரப்பின் 
அடிப்படையில் அந்நிறுவனத்தின் உலகளாவிய செயற்கைக்கோள் இன்டல்சாட்20 அலைவரிசையில் ஒளிபரப்பாகிறது.இத்தொலைக்காட்சிகள் அனைத்து கட்டண தொலைக்காட்சிளாக தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
இத்தொலைக்காட்சிகளின் இலவச ஒளிபரப்பு 
மாற்றத்திற்குட்பட்டது.தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு மிக தெளிவான வீடியோ மற்றும் ஆடியோவில் அமைந்துள்ளது.தொலைக்காட்சிகள் அனைத்தும் மாவீஸ் மீடியா நிறுவனத்தின் ஒளிபரப்பு முனையத்தின் முலம் இந்தியாவில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.விரைவில் 24 மணி நேர நிகழ்ச்சிகள் தொடங்கப்படும்.
அலைவரிசை விபரங்கள்;
Satellite                    Intelsat20@68.5E(C-BAND)
Freq Rate                 4130
Symbol Rate            10370
Polar                        Vertical
Modulation               Mpeg4/Dvb s1
Mode                       PAY/FTA  

Dec 3, 2015

சன் டிவி ரெஸ்ட் ஆப் இந்தியா தமிழ் தொலைக்காட்சி சோதனை ஒளிபரப்பு இன்டெல்சாட்17@66 ல் ஆரம்பம்

சன் டிவி ரெஸ்ட் ஆப் இந்தியா தமிழ் தொலைக்காட்சி சோதனை ஒளிபரப்பு இன்டெல்சாட்17@66 ல் ஆரம்பம்.முதன் முதலாக படதொகுப்புகள் நமது டிஷ் டிராக் ப்ரண்ட்ஸ் தமிழ் இணையதளத்தில்.
TP : 3925 V 30000 Mpeg 4 Dvbs2 8 PSK.

Dec 2, 2015

பூம்ரிங் மற்றும் டூனாமி கார்டூன் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு தாய்காம்6@78.5யில் தொடக்கம்

நண்பர்களே தாய்லாந்து நாட்டின் தொலைக்காட்சி ஒளிபரப்பு செயற்கைகோளான தாய்காம்6யில் தாய்லாந்து நாட்டின் பிஎஸ்ஐ நிறுவன தொலைக்காட்சி ஒளிபரப்பு அலைவரிசையில் உலகின் முன்னனி புதிய கார்டூன் தொலைக்காட்சிகளான பூம்ரிங் மற்றும் டூனாமி ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இத்தொலைக்காட்சிகள் இரண்டும் கட்டண 
தொலைக்காட்சிகளாக தாய்காம்6யில் ஒளிபரப்பாகிறது.உலகின் மிக பிரபலமான கார்டூன் நிகழ்ச்சிகளை வழங்குகிறது இவ்விரு தொலைக்காட்சிகளும்.இத்தொலைக்காட்சியின் அலைவரிசை சிக்னலை தென்இந்தியாவில் பெற குறைந்தபட்சம் 4 முதல் 6 அடி வரையிலான கேயூ டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.தாய்லாந்து மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளில் அலைவரிசை சிக்னலை பெற 60 செமீ முதல் 120 வரையிலான டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.
அலைவரிசை விபரங்கள்:
Satellite                Thaicom6@78.5E(KU-Band)
Freq Rate              12730
Symbol Rate         30000
Polar                     Vertical
Modulation           Mpeg2/Dvb s1
Mode                    Pay/Biss

Nov 28, 2015

மேற்கித்திய நாடுகளுக்கான டிடி பொதிகை தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு ஆப்ரிக்காசாட்1எ செயற்கைகோளில் தொடக்கம்

நண்பர்களே ஆப்ரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் வாழும்இந்தியா்கள் கானும் வகையில் இந்திய அரசின் துர்தர்ஷன்தொலைக்காட்சிகளில் டிடி பொதிகை தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு முதன்முறையாகஆப்பிரிக்கா நாட்டின்ஆப்ரிக்காசாட்1எசெயற்கைகோளில்தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக விளங்கும் பொதிகை  தொலைக்காட்சியின் ஒளிபரப்பு கடந்த சில வருடங்களுக்கு முன்பு அம்ஸ்5 செயற்கைகோளின் முலம் ஆப்பிரிக்கா நாடுகளில் ஒளிபரப்பு தொடங்கப்பட்டது.தற்சமயம் இத்தொலைக்காட்சியின் புதிய  ஒளிபரப்பு  ஆர் ஆர் சாட் செயற்கைகோள் ஒளிபரப்பு முனையத்தின் முலம் ஆப்ரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு தொடங்கப்பட்டுள்ளது.இதன் அலைவரிசையில் டிடி சப்தகிரி டிடி உருது டிடி சகயடிரி போன்ற தொலைக்காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
தொலைக்காட்சியின் 
அலைவரிசை சிக்னலை இந்தியாவில் பெற குறைந்தபட்சம் 10 முதல் 12 அளவுள்ள சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.மேலும் அதிநவின செட்டாப் பாக்ஸ்யை பயன்படுத்த வேண்டும்.அனைத்து தொலைக்காட்சிகளும் இலவச ஒளிபரப்பாக ஆப்பிரிக்காசாட்1எ செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.ஆப்பிரிக்கா மற்றும் வளைகுடா ஐரோப்பா நாடுகளில் உள்ள தமிழ்ர்கள் பொதிகை தொலைக்காட்சியினை காண குறைந்தபட்சம் 8 அடி சிபேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.
அலைவரிசை விபரங்கள் :
Satellite                 Africasat1A@46.0E (C-Band)
Freq Rate              3732
Symbol Rate         30000
Polar                      Vertical
Modulation            Mpeg4/Dvb s2
Mode                     FTA

Nov 21, 2015

துர்தர்ஷன் குழும தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு புதிய செயற்கைகோளான ஜிசாட்10@83.0Eயில் தொடக்கம்

நண்பர்களே இந்திய அரசின் பொது தொலைக்காட்சி சேவையான பிரசார் பாரதியின் டிடி நேஷனல் டிடி ஹெச்டி டிடி நியூஸ் டிடி ஸ்போர்ட்ஸ் டிடி பாரதி டிடி கிஷான் மற்றும் சில டிடி தொலைக்காட்சிகளின் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு புதிய செயற்கைகோளான ஜிசாட்10யில் தொடங்கியுள்ளது.சில மாதங்களுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்ட இப்புதிய செயற்கைகோளில் இந்தியா அரசின் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு 
தொடங்கப்பட்டுள்ளது.இத்தொலைக்காட்சிகள் அனைத்தும் இன்சாட்3எ செயற்கைகோளில் ஒளிபரப்பை வழங்கி வந்தநிலையில் அச்செயற்கைகோளின் பயன்பாடு முடிவடையும் நிலையில் இப்புதிய செயற்கைகோளுக்கு தொலைக்காட்சிகள் அனைத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதே அலைவரிசையில் சோதனை ஒளிபரப்பை அந்தமான் தீவுகளுக்கான டிடி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு தொடங்கப்பட்டு இடைநிறுத்தம் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.தற்சமயம் 
தொடங்கப்பட்டுள்ள புதிய அலைவரிசையின் சிக்னல் 6 முதல் 16 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவில் கிடைக்கும்.மேலும் எளிய தொழில்நுட்ப வசதியுடைய MPEG2/DVB S1 செட் டாப் பாக்ஸ்யில் தொலைக்காட்சிகளை காணலாம்.விரைவில் மற்ற மாநில மொழி டிடி தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பும் ஜிசாட்10 செயற்கைகோளில் தொடங்கலாம்.இப்புதிய ஒளிபரப்பு வளைகுடா மற்றும் கிழக்காசியா போன்ற நாடுகளுக்கும் கிடைக்கும்.துர்தர்ஷனின் அதிநவின தொலைக்காட்சியான டிடி ஹெச்டிம் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.
அலைவரிசை விபரங்கள்
Satellite                       GSAT10@83.0E(C BAND)
Freq Rate                     3885
Symbol Rate                27500
Polar                            Vertical
Modulation                  Mpeg2/Dvb s1
Mode                            FTA

D2H லைப் 4கே(D2H LIFE UHD 4K) புதிய அல்ட்ர யூஹெச்டி தொலைக்காட்சி ஒளிபரப்பு ST2@88.0E தொடக்கம்

நண்பர்களே இந்தியாவின் மிக பிரபலமான டிடி ஹெச் சேவையான வீடியோகான் டிடிஎச் நிறுவனம் முதன்முறையாக இந்தியாவிற்கான அதிநவின தொலைக்காட்சியான D2H லைப்  அல்ட்ரா ஹெச்டி 4கே என்ற பெயரில் தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்கியுள்ளனர்.இந்தியாவில் அல்ட்ரா ஹெச்டி தொலைக்காட்சி தொடங்கிய முதல் டிடிஎச் நிறுவனம்
இதுவாகும்.தற்சமயம் இலவச ஒளிபரப்பாக எஸ்டி2 செயற்கைகோளில் ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.மிக தெளிவான விடியோ மற்றும் ஆடியோ தரத்தில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.இந்தியாவை பொருத்தமட்டிலும் கடந்த வருடம் முதல் சில முன்னனி தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்களின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு என்று புதிய ஹெச்டி தொலைக்காட்சிகளை தொடங்கி வருகின்றனர்.அவ்வரிசையில் டிடிஎச்
நிறுவனங்கள் புதிய தொழில்நுட்ப தொலைக்காட்சிகளை நிறுவனங்களின் சார்பாக தற்சமய காலங்களில் தொடங்கி வருவது குறிப்பிடதக்கது.D2H லைப் 4கே தொலைக்காட்சி தற்காலிக சோதனை ஒளிபரப்பின் அடிப்படையில் இலவச ஒளிபரப்பாக தொடங்கப்பட்டுள்ளது.எவ்வித நேரங்களிலும் கட்டண  தொலைக்காட்சியாக  மாற்றப்படலாம்.
அலைவரிசை விபரங்கள்:
Satellite                 ST2@88.0E(KU BAND)
Freq Rate               11483
Symbol Rate          44997
Polar                      Horizontal
Modulation            HEVC/UHD MPEG4/DVB S2
Mode                     FTA

Nov 15, 2015

ஆசியாவின் முதல் தமிழ் அல்ட்ரா ஹெச்டி தொலைக்காட்சி ஒளிபரப்பு யூடெல்சாட்70B@70.5Eயில் உதயம்

நண்பர்களே தமிழ் தொலைக்காட்சியில் முதன்முறையாக அதிநவின தொழில்நுட்ப வசதியுடைய அல்ட்ரா ஹெச்டி வடிவில் புதிய தமிழ் தொலைக்காட்சி சோதனை ஒளிபரப்பை தற்காலிக அடிப்படையில் ஜெர்மனி நாட்டின் ஹெரிஜான் தொலைக்காட்சி ஒளிபரப்பு செயற்கைகோள் முனையத்தின் முலம் யூடெல்சாட்70பி செயற்கைகோளில் தொடங்கியுள்ளனர்.ஆசியாவில் முதன்முறையாக தமிழ் நிகழ்ச்சிகளை 
வழங்ககூடிய அதிநவின தொழில்நுட்ப அல்ட்ரா ஹெச்டி தொலைக்காட்சியை தொடங்கியுள்ளது வரவேற்க்கதக்கது.தற்சமயம் ஒரு குறிப்பிட்ட திரைப்பாடல்களுடன் நிகழ்ச்சிகளை வழங்கிவருகிறது.ஜெர்ரி அல்ட்ரா ஹெச்டி ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பாக தொடங்கப்பட்டுள்ளது.யூடெல்சாட்70 செயற்கைகோளில் தற்சமயம் மூன்று அல்ட்ரா தொலைக்காட்சிகளை தொடங்கியுள்ளனர்.இத்தொலைக்காட்சிகளை 
காண அதிநவின வசதியுடைய அல்ட்ரா ஹெச்டி செட் டாப் பாக்ஸ் பயன்படுத்த வேண்டும்.இத்தொலைக்காட்சி வளைகுடா.ஆசியா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கான பிரத்தியோக சோதனை ஒளிபரப்பு தொலைக்காட்சியாகும்.இலவச தொலைக்காட்சியாக தமிழ் அல்ட்ரா ஹெச்டி யூடெல்சாட்70பியில் ஒளிபரப்பாகிறது.முதன்முறையாக அல்ட்ரா ஹெச்டி தொலைக்காட்சி படதொகுப்புகள் நமது டிஷ் டிராக் ப்ரண்ட்ஸ்  தமிழ் இணையதளத்தில்.
அலைவரிசை விபரங்கள்:
Satellite               Eutelsat70B@70.5E(KU-Band)
Freq Rate            11355
Symbol Rate       45000
Polar                   Vertical
Modulation         UHD/MPEG4/DVB S2
Mode                   FTA

Nov 9, 2015

பாக்ஸ் ஆக்ஸன் மூவிஸ் ஹெச்டி ஆங்கில திரைப்பட தொலைக்காட்சி இலவச ஒளிபரப்பு ஆசியாசாட்5@100.5E

நண்பர்களே பாக்ஸ் எண்டர்டெய்ன்மென்ட் சேனல்ஸ் நிறுவனத்தால் தெற்காசிய மற்றும் சீனா போன்ற நாடுகளுக்காக தொடங்கப்பட்ட ஆங்கில அதிரடி திரைப்பட தொலைக்காட்சியான பாக்ஸ் ஆக்ஸன் மூவிஸ் ஹெச்டி தற்காலிக இலவச தொலைக்காட்சியாக ஆசியாசாட்5 செயற்கைகோளில் 
ஒளிபரப்பாகிறது.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள் அனைத்தும் எவ்வித விளம்பர இடைவெளியின்றி ஒளிபரப்பாகிறது.அனைத்து பகுதிகளிலும் தொலைக்காட்சியின் செயற்கைகோள் அலைவரிசை சிக்னல் 6 மற்றும் 12 அளவுள்ள சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவில் கிடைக்கிறது.இத்தொலைக்காட்சியின் இலவச ஒளிபரப்பு எவ்வித நேரங்களிலும் இடைநிறுத்தம் செய்யலாம்.மிக துல்லியமான வீடியோ மற்றும் ஆடியோ தரத்தில் திரைப்படங்கள் ஒளிபரப்பாகிறது.

அலைவரிசை விபரங்கள்
Satellite                 Asiasat5@100.5E(C-Bnad)
Freq Rate              4040
Symbol Rate         29720
Polar                     Horizontal
Modulation           HD.Mpge4/Dvb s2
Mode                     Fta/Pay

Oct 25, 2015

இந்தியாவில் முதன்முறையாக இன்சைட் அல்ட்ர ஹெச்டி 4கே தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்சாட்4எயில் உதயம்

நண்பர்களே இந்தியாவின் முதல் அதிநவின தொழில்நுட்பம் கொண்ட அல்ட்ர ஹெச்டி தொலைக்காட்சியின் ஒளிபரப்பு முதன்முறையாக இந்தியா செயற்கைகோளான இன்சாட்4எ யில் இன்சைட் டிவி 4கே என்னும் தொலைக்காட்சி புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.இத்தொலைக்காட்சியின் தொடக்க சோதனை ஒளிபரப்பு அக்டோபர் மாதம் முதல் தொடங்கப்பட்டுள்ளது.உத்திர பிரதேசம் மாநிலம் நெய்டாவில் செயல்படும் NSTPL செயற்கைகோள் ஒளிபரப்பு முனையத்தின் முலம் தொடங்பட்டுள்ளது.தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் உலக நாடுகளின் கலச்சார தொடர்புடைய நிகழ்ச்சிகளை ஆங்கில மொழியில் வழங்குகிறது.இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் யூஹெச்டி 4கே தொலைக்காட்சி இதுவாகும்.முன்னனி தொலைக்காட்சி 
நிறுவனங்கள் இருப்பினும் தனிப்பட்ட முறையில் அதிநவின தொலைக்காட்சியை இன்சைட் டிவி தொடங்கியுள்ளது.இன்சைட் டிவி உலக அளவில் அறிவியல் சார்ந்த நிகழ்ச்சிகளை வழங்கி வரும் நிலையில் கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவில் ஹெச்டி தொழில்நுட்பத்தில் நிகழ்ச்சிகளை இந்தியா நியூஸ் ஹிந்தி செய்திகள் தொலைக்காட்சி நிறுவனத்தின் முலம் இன்டல்சாட்20 செயற்கைகோளில் தொடங்கப்பட்டது.தற்சமயம் தொடங்கப்பட்டுள்ள இன்சைட் டிவி இலவச ஒளிபரப்பாக இன்டல்சாட்20 மற்றும் இன்சாட்4எ யில் தொடங்கப்பட்டுள்ளது.யுஹெச்டியின் ஒளிபரப்பை காண யுஹெச்டி தொழில்நுட்ப வசதி கொண்ட செட் டாப் பாக்ஸ்யை பயன்படுத்த வேண்டும்.வரக்கூடிய காலங்களில் யுஹெச்டி தொலைக்காட்சிகள் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு துறைகளிலும் தொடங்கப்படலாம்.
அலைவரிசை விபரங்கள்
Satellite                       Insat4A@83.0E (C-BAND)
Freq Rate                    3725
Symbol Rate               26666
Polar                           Horizontal
Modulation                 4K UHD/DVB S1
Mode                           Fta 

Oct 11, 2015

ஜெயா மேக்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் முதன்முறையாக இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி ஒளிபரப்பு

நண்பர்களே தமிழகத்தின் முன்னனி தமிழ் தொலைக்காட்சி நிறுவனமான ஜெயா டிவி குழுமத்தின் 24 மணி நேர மியூசிக் தொலைக்காட்சியான ஜெயா மேக்ஸ் முதன்முறையாக இந்தியாவில் நடைபெறும் 2015 ஆண்டுக்கான இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி தொடர்களை தமிழ் வருணையுடன் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.இப்போட்டி தொடர்களை ஒளிபரப்புவதற்கான அனுமதியை இந்தியாவின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு தொலைக்காட்சி நிறுவனம் பெற்றுள்ளது.தமிழகத்தில் ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் முதன்முறையாக விளையாட்டு போட்டி 
தொடர்களை தனது தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது முதல்முறையாகும்.கடந்த சில வருடங்களாக தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டிகளை ஒளிபரப்பி மக்களின் வரவேற்ப்பினை பெற்றுவருகின்றன.
ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சியை பொருத்தமட்டிலும் தமிழ் திரைப்பாடல்களை மக்களின் விருப்பத்திற்கேற்ப வழங்கி வரும் நிலையில் இப்புதிய முயற்ச்சியில் களம் இறங்கியுள்ளது தமிழ் கால்பந்து ரசிகர்களின் வரவேற்ப்பை பெறும் வகையில் அமைந்துள்ளது.ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் தங்களின் விளையாட்டு போட்டி தொடர்களை தமிழகத்தின் ஜெயா 
தொலைக்காட்சியுடன் ஒளிபரப்பு செய்வது இதுவே முதன்முறையாகும்.தமிழகத்தில் ஸ்டார் டிவி நிறுவனத்தின் தமிழ் தொலைக்காட்சியாக விஜய்டிவி செயல்படுவது குறிப்பிடதக்கது.கடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடர்களை தமிழ் வருணையுடன் தமிழகத்தில் ஒளிபரப்பியிருந்தது குறிப்பிடதக்கது.ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சி கட்டண தொலைக்காட்சியாக இன்டல்சாட்20 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.போட்டிகளை கேபிள் மற்றும் டிடிஎச் முலமாக ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சியில் காணலாம்.

Sep 25, 2015

பெப்பர் டிவி செயற்கைகோள் ஒளிபரப்பு புதிதாக இன்டல்சாட்17 செயற்கைகோளுக்கு மாற்றம்

நண்பர்களே தமிழகத்தின் முன்னனி பொழுது போக்கு தமிழ் தொலைக்காட்சியான பெப்பர் டிவி செயற்கைகோள் ஒளிபரப்பு தமிழ் தொலைக்காட்சிகள் சங்கமிக்கும் செயற்கைகோளான இன்டல்சாட்17க்கு மாற்றம்செய்யப்பட்டுள்ளது. பெப்பர் டிவியின் முதல் தொடக்க செயற்கைகோள் ஒளிபரப்பு இந்தியாவின் பார்த்தி டெலிஸ்பாட் நிறுவனத்தின் 
ஒளிபரப்பு முனையத்தின் முலமாக இன்டல்சாட்20 செயற்கைகோளில் தொடங்கப்பட்டு தற்சமய காலம் வரை ஒளிபரப்பாகி வந்தது.பெப்பர் டிவியின் நிகழ்ச்சிகள் என்று பார்த்தால் திரைப்படம் மற்றும் கேம் ஷோ போன்ற நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.பார்த்தி டெலிஸ்பாட் நிறுவனம் இன்டல்சாட்17 செயற்கைகோளிலும் தொலைக்காட்சிகள் ஒளிபரப்புவதற்கான அலைவரிசையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.தற்சமயம் தொடங்கப்பட்டுள்ள புதிய அலைவரிசை 
சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 முதல் அதற்கு மேற்பட்ட சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.தொலைக்காட்சியின் ஒளிபரப்பு MPEG4/DVB S2 தொழில்நுட்ப செட்டாப் பாக்ஸில் மட்டுமே கிடைக்கிறது.மேலும் இப்புதிய அலைவரிசையில் தமிழ் மற்றும் பல மொழி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பை தொடங்கலாம்.பெப்பர் டிவி ஒளிபரப்பு இலவச இன்டல்சாட்17 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.

அலைவரிசை விபரங்கள்
Satellite                  Intelsat17@66.0E(C-Band)
Freq Rate               3933
Symbol Rate          18333
Polar                       Horizontal
Modulation             Mpeg4/Dvb s2
Mode                      Fta

Sep 18, 2015

மீனாட்சி டிவி புதிய தமிழ் தொலைக்காட்சி செயற்கைகோள் ஒளிபரப்பு இன்டல்சாட்17@66 யில் ஆரம்பம்

நண்பர்களே தமிழ்நாட்டின் புதிய செயற்கைகோள் தமிழ் தொலைக்காட்சி மீனாட்சி டிவி என்ற பெயரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.இப்புதிய தமிழ் தொலைக்காட்சியின் உலகளாவீய செயற்கைகோள் ஒளிபரப்பு இன்டல்சாட்17யில் சென்னை டெலிஸ்பாட் செயற்கைகோள் ஒளிபரப்பு முனையத்தின் முலம் தொடங்கப்பட்டுள்ளது.
மீனாட்சி டிவி நிறுவனம் இந்தியாவில் தங்களது புதிய தொலைக்காட்சியை  ஒளிபரப்புவதற்கான உரிமத்தின் அனுமதியை இந்திய ஒளிபரப்பு அமைச்சகம் கடந்த வருடம் 
வழங்கியிருந்தது.மீனாட்சி டிவி தமிழ் மொழியில் 24 மணிநேர பொழுது போக்கு தமிழ் தொலைக்காட்சியாகும்.தமிழகத்தில் இவ்வருடத்தில் தொடங்கப்பட்ட இரண்டாவது தொலைக்காட்சியாகும்.தொலைக்காட்சியின் செயற்கைகோள் அலைவரிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 முதல் 8.10.12 அளவுள்ள சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.மேலும் MPEG4/DVB S2 தொழில்நுட்ப செட் டாப் பாக்ஸ்யை பயன்படுத்த 
வேண்டும்.
இத்தொலைக்காட்சிகான 24 மணி நேர ஒளிபரப்பு விரைவில் தொடங்கலாம்.தமிழகத்தில் கடந்த சில வருடங்களில் தமிழ் தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்டு வரும் நிலையில் மீனாட்சி டிவியின் நிகழ்ச்சிகள் வித்தியாசமானதாக இருக்கலாம்.மீனாட்சி டிவி முற்றிலும் இலவச தொலைக்காட்சியாக தனது முதல் ஒளிபரப்பை இன்டல்சாட்17 செயற்கைகோளில் தொடங்கியுள்ளது.
அலைவரிசை விபரங்கள்:
Satellite                Intelsat17@66.0E (C-Band)
Freq Rate              3966
Symbol Rate         14400
Polar                      Horizontal
Modulation            Mpeg4/Dvb s2
Mode                     Fta

Sep 13, 2015

ஹரிசான் டிடிஹைச் துபாய் யூட்டெல் சாட் 70பீ @ 70.5 ல் விரைவில் ஆரம்பம்

நண்பர்களே ஆசியா,ஐரோப்பா நாடுகளுக்கான புதிய டிடிஹச் சேவையை ஹரிசான் சாட் நிறுவனம் H-டிடிஹச்(துபாய்) என்ற பெயரில் யூட்டெல் சாட் 70பீ @70.5 ல் விரைவில் தனது நிரந்திர ஒளிபரப்பை ஆராம்பிக்கவுள்ளது.
இதன் ஒரு முண்ணோட்டமாக கடந்த சில மாதமாக பாலிமர்,தந்தி,டான் தமிழ் ஒளி,தீபம் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு செய்யபட்டு வருகிறது.மேலும் பல இந்திய, இலங்கை தொலைக்காட்சிகள் விரைவில் வரவிற்கின்றன...

Sep 10, 2015

இந்தியாவின் முதல் ஷாப்பிங் ஹெச்டி தொலைக்காட்சி நாப்டல் ஹெச்டி இன்சாட்4எ @ 83.0 ல் ஒளிபரப்பு ஆரம்பம்

நண்பர்களே இந்தியாவில் அதிநவின ஹெச்டி தொழில்நுட்ப தொலைக்காட்சிகள் பொழுதுபோக்கு விளையாட்டு செய்திகள் என பல்வேறு பிரிவுகளில் தொடங்கப்பட்டு வருகிறது.அந்த வரிசையில் இந்தியாவின் முன்னனி வீட்டு உபயோக பொருட்களை விற்ககூடிய நிறுவனமான நாப்டல் கடந்த வருடம் முதல் தொழில் ரீதியான தொலைக்காட்சிகளை தொடங்கி வருகிறது.
தமிழ் மலையாளம் ஹிந்தி தெலுங்கு கன்னடா போன்ற மொழிகளில் தொலைக்காட்சிகளை 
நிறுவியுள்ளனர்.
தற்சமயம் அந்நிறுவனம் அநவின தொழில்நுட்ப ஹெச்டி தொலைக்காட்சியை நாப்டல் ஹெச்டி என்ற பெயரில் தொடங்கியுள்ளனர்.இப்புதிய தொலைக்காட்சியின் ஒளிபரப்பு இந்தியாவின் இன்சாட்4எ செயற்கைகோளின் மூலம் தனது சோதனை ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் ஷாப்பிங் ஹெச்டி தொலைக்காட்சி இதுவாகும்.தொலைக்காட்சியில் 24 நேரமும் வீட்டு 
உபயோக பொருட்கள் தொடர்பான விளக்கங்கள் மற்றும் அவற்றின் விலை போன்ற விபரங்கள் தொடர்பான நிகழ்ச்சிகை வழங்குகிறது.தொலைக்காட்சியின் ஒளிபரப்பு ஹிந்தி மொழியில் தொடங்கப்பட்டுள்ளது.நாப்டல் தொலைக்காட்சியின் அலைவரிசையின் சிக்னலை பெற 8 முதல் அதற்குமேற்பட்ட சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயனபடுத்தலாம்.இலவச தொலைக்காட்சியாக இன்சாட்4எ செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.
அலைவரிசை விபரங்கள்
Satelllite              Insat4a@83.0E(C-Band)
Frequency           - 3805
Symbol Rate      - 28500
Polarity               - Horizontal
Modulation        - HD.Mpeg4/Dvb s
Mode                     - Free to air

Sep 8, 2015

பிளவர்ஸ் மலையாளம் தொலைக்காட்சி யூட்டெல்சாட்70பீ@70.5 ல் ஆரம்பம்

நண்பர்களே மலையாள மக்களின் மனம் கவர்ந்த பிளவர்ஸ் தொலைக்    காட்சி  யூட்டெல் சாட் 70பீ@70.5  செயற்கைகோலில் இன்று முதல் தனது ஒளிபரப்பை தொடங்கி யுள்ளது.
மிக எளிதான இதன் சிக்னலை 60 மற்றும் 90 செ.மீ Ku band டிஷ் ஆண்டெனா மூலம் 62 நாடுகளில் இலவச செட் டாப் பாக்ஸ் மூலம் கண்டுகளிக்கலாம்.    
                                                                       
அலைவரிசை  விபரங்கள் :                    
Satellite - Eutelsat70b@70.5 deg kuband
Frequency - 11355.                                    
Symbol Rate - 44900.                                  
Polarity - Vertical.                                        
Modulation - Mpeg4/dvb s2.                    
 Mode - Free to air

Sep 5, 2015

தீபம் தமிழ் தொலைக்காட்சி லண்டன் யூட்டெல் சாட் 70 பி ல் ஆரம்பம்

 நண்பர்களே குறுகிய  காலத்தில் இலங்கை சேனலில் ஆரம்பம் செய்து அடுத்து இந்தியாவின்   சேனல்களை  ஆகிரமைத்து ,
இப்பொழுது லண்டன் வரை சென்று பட்டைய கிளப்பும் யூட்டெல் சாட் 70 பி டிகிரி செயற்க்கைகோள்  நான் ஏற்கனவே கூறியது போன்று இந்த சேட் லைட் சிக்னல் கிடைக்கும் அனைத்து நாட்டு சேனல்களும் விடப்படுமாயின் உலகிலேயே இது தான் முதலிடம் பிடிக்கும் என்றேன் அது நிஜமாகும்.
நேற்று முதல் தீபம் தொலைக்காட்சி  தனது சேனலை இந்த செயற்க்கைகோளில் இணைத்துள்ளது.                                                                                                                                                                              
அலைவரிசை விபரங்கள்
Satellite                    Eutelsat70B@70.5E(Ku-band)
Freq Rate                 11355
Symbol Rate             44900
Polar                        Vertical
Modulation                Mpeg4/Dvb s2
Mode                        Fta         

                                                                                                                                                                  

Aug 25, 2015

வளைகுடா நாட்டின் கல்ப் மலையாளம் ஹெச்டி தொலைக்காட்சியில் தமிழ் பாடல்கள் ஒளிபரப்பு

நண்பர்களே வளைகுடா நாடுகளில் வாழும் இந்திய மக்களின் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளை அங்கு செயல்படும் இந்திய தொலைக்காட்சி நிறுவனங்கள்  தொடங்கி வருகிறது.
அவ்வகையில் மலையாளம் மொழி 
தொலைக்காட்சிகள் தற்சமயம் தொடங்கப்பட்டு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை புதிய யூடெல்சாட்70பி செயற்கைகோளில் வழங்குகிறது.அதன் அடிப்படையில் புதிய ஹெச்டி தொலைக்காட்சி கல்ப் டிவி மலையாளம் கடந்த மாதத்தில் துபாயில் இருந்து தொடங்கப்பட்டது.அத்தொலைக்காட்சி மலையாளம் மொழியில் தொடங்கப்பட்ட முதல் ஹெச்டி வெளிநாட்டு 
தொலைக்காட்சியாகும்.இத்தொலைக்காட்சியில் மலையாளம் ஹிந்தி மற்றும் தமிழ் திரைப்படங்களின் பாடல்கள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.தொலைக்காட்சியின் அலைவரிசை சிக்னல் மிக குறைந்த அளவுள்ள கேயூ டிஷ் ஆன்டெனா முலம் கிடைக்க கூடியதாகவுள்ளது.
தமிழ் பாடல் அனைத்தும் ஹெச்டி தொழில்நுட்பத்தில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.தற்சமயம் சோதனை ஒளிபரப்பு மட்டும் வழங்கி வரும் 
இத்தொலைக்காட்சியின் உலகளாவிய ஒளிபரப்பு விரைவில் தொடங்கப்படும்.கேரளா மாநிலத்தில் செயல்படும் ஈசல் சியாம் செயற்கைகோள் ஒளிபரப்பு முனையத்தின் முலம் வளைகுடா நாடுகள் முழுவதும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.இலவச தொலைக்காட்சியாக கல்ப் டிவி யூடெல்சாட்70பியில் செயல்படுகிறது.
அலைவரிசை விபரங்கள்:
Satellite                Eutelsat70B@70.5E(KU-BAND)
Freq Rate              11355
Symbol Rate         44900
Polar                      Vertical
Modulation            HD DVB/S2 FTA

Aug 23, 2015

தமிழ் பாடல்களை ஒளிபரப்பும் புதிய வானொலி ஒளிபரப்பு என்எஸ்எஸ்6@95.0 தொடக்கம்

நண்பர்களே இந்தியாவின் டிஷ்டிவி டிடிஎச் நிறுவனத்தின் வானொலி ஒளிபரப்பில் புதிய தமிழ் பாடல்களை ஒளிபரப்ப கூடிய புதிய வானொலி சேவை தொடங்கப்பட்டுள்ளது.சோதனை ஒளிபரப்பாக தொடங்கப்பட்டுள்ள து.மேலும் இந்த சேவை ஒளிபரப்பில் ஹிந்தி மொழி பாடல்களை ஒளிபரப்பும் 
வானொலியும் இடம் பெற்றுள்ளன.டிஷ்டிவி நிறுவனத்தினால் ஒளிபரப்படும் இந்த வானொலி சேவையில் இடைவிடாத தமிழ் பாடல்கள் இடம்பெறுகிறது.இலவச வானொலியாக என்எஸ்எஸ்6 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.மிக எளிய தொழில்நுட்ப MPEG2/DVB S1 வடிவ செட் டாப் பாக்ஸ்யில் வானொலி சேவையை கேட்கலாம்.இந்த புதிய சேவையில் பல்வேறு ஆடியோ வரிசையில் தமிழ் ஒளிபரப்பை கேட்க ஆடியோ 9 தை மாற்றம் செய்து பாடல்களை கேட்கலாம்.
அலைவரிசை விபரங்கள்:
Satellite                   NSS6@95.0E(KU-BAND)
Freq Rate               12690
Symbol Rate            32700
Polar                        Horizontal
Modulation               Mpeg2/Dvb s1
Mode                       Fta 

Aug 20, 2015

யூடெல்சாட் @70.5B செயற்க்கைகோள் சுவாரஸ்யமான தகவல்கள்

நண்பர்களே யூடெல்சாட்  70B ல் கடந்த ஆண்டு இலங்கை நாட்டின் டான் தமிழ் குழுமத்தின் சேனல்களை ஆரம்பித்து அசத்தியது.
இதில் இலங்கை வாடிக்கையாளர்களுக்காக தொடர்ச்சியாக இலங்கையின் மற்ற  சேணல்களும் வர ஆரம்பித்தது.  இது அவர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் இந்தியர்கள் மட்டுமின்றி இந்த சேட்டிலைட் கவரேஜ் கிடைக்கும் அனைத்து நாடுகளில் வாழும் தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இரண்டாம் கட்டமாக யூடெல்சாட் @ 70B யில் இந்தியர்களின் தாகத்தை தீர்க்க முதல் கட்டமாக தென்னிந்திய மொழியான தமிழ் , மலையாளம் சேனல்கள் விடப்பட்டு அனைவரின் கவனத்தை ஈர்த்தது .
இனி வரும் காலங்களில் சி பேண்ட் சேவையில் சோதணை ஒளிபரப்பை துவங்கும் அனைத்து சேனல்களும் கேயு பேண்டிலும் தனது வெள்ளோட்டத்தை விடும் என்றால் ஆச்சரிய பட தேவை இல்லை.நம்ம பாக்குற சேனல் எல்லாம் தமிழ் நாட்டில் சென்னையை மையமாக கொண்டு அதிகப்படியான சேனல்களும் கோவை , சேலத்தில் இருந்து தலா இரண்டு சேனல்களும் சேட்லைட்யில் விடுகின்றனர் . இவை அனைத்து செயற்க்கைகோளுக்கு அனுப்ப பட்டு அங்கிருந்து மீண்டும் கீழ் நோக்கி வருகிறது. இவ்வாறன முறையில் தான் அனைத்து தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பு செய்கிறது.
இதனை தொடர்ந்து விரைவில் அனைத்து நாட்டு சேனல்களும் மக்களுக்கு இலவசமாக கிடைக்கும் என்ற ஒரு உண்மை தகவல் நமக்கு வெளியாகி உள்ளது. எடுத்துக்காட்டடாக அமெரிக்க சாட்டிலைட் HOTBIRD @ 13 DEG  போன்று இந்த செயற்கைக்கோளில் இந்த ஆண்டு இறுதிக்குள் 200 மேற்பட்ட  இலவச சேனல்கள் கிடைக்கும் ஒரே கேயு பேண்ட் டிடிஹச் என்ற பெருமையை பெறவுள்ளது என்றும் நம்பகதக்க தகவல் கிடைத்துள்ளது .நனறி

Aug 15, 2015

சிவம் டிவி(SIVAM TV TAMIL) புதிய ஆன்மிக தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு தமிழகத்தில் இன்டல்சாட்17யில் தொடக்கம்

நண்பர்களே தமிழகத்தில் புதிய பக்தி ஆன்மிக தமிழ் தொலைக்காட்சி சிவம் டிவி என்ற பெயரில் இன்டல்சாட்17 செயற்கைகோளில் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.சிவம் தொலைக்காட்சியின் செயற்கைகோள் ஒளிபரப்பு ஆந்திர மாநிலத்தின் ஆந்திரி என்ரிச்சி தொலைக்காட்சியின் ஒளிபரப்பு
உரிமத்தில் தொடங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தொடங்கப்படும் இரண்டாவது தமிழ் இந்து தொலைக்காட்சி இதுவாகும்.கடந்த வருடத்தில் இணையதள தொலைக்காட்சியாக தொடங்கப்பட்டது.
தொலைக்காட்சியின் அலைவரிசை சிகனலை பெற குறைந்தபட்சம் 8 முதல் 10.12 அளவுள்ள சி பேன்ட் டிஷ்
ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.மேலும் MPEG4/DVB S2 தொழிலிநுட்ப பொருந்திய செட் டாப் பாக்ஸ் பயன்படுத்த வேண்டும்.தமிழகத்தில் தரிசனம் ஆன்மிக தமிழ் தொலைக்காட்சி தொடங்கப்பட்டு இடைநிறுத்திற்கு பின்பு புதிய தமிழ் ஆன்மிக தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது வரவேற்க்க தக்கது.இன்டல்சாட்17 செயற்கைகோளில் இலவச தொலைக்காட்சியாக சிவம் டிவி ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.
அலைவரிசை விபரங்கள்
Satellite                   INTELSAT17@66.0E(C-BAND)
Freq Rate               3877
Symbol Rate           14300
Polar                       Horizontal
Modulation              Mpeg4/Dvb S2
Mode                      Fta

Aug 13, 2015

ஷாப்பிங் ஜீன் தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு இன்டல்சாட்17யில் புதிய அலைவரிசைக்கு மாற்றம்

நண்பர்களே தமிழகம் மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு இணைந்து கடந்த சில வருடங்களுக்கு ஷாப்பிங் ஜீன் நிறுவனத்தினரால் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தொடங்கப்பட்ட ஷாப்பிங் ஜீன் டிவியின் செயற்கைகோள் ஒளிபரப்பு அலைவரிசையில் தற்சமயம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தொலைக்காட்சியின் தொடக்க ஒளிபரப்பு இன்டல்சாட்17யில் முதன்முதலாக ஐதராபாத் ஒளிபரப்பு முனையத்தின் அலைவரிசையில் (3895) தொடங்கப்பட்டது.
தற்சமயம் அதே செயற்கைக்கோள் ஒளிபரப்பு நிறுவனத்தின் மற்றொரு அலைவரிசையில் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.புதிய அலைவரிசையின் சிக்னலை பெற 8 முதல் 10.12 அளவுள்ள சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்டுத்த வேண்டும்.இலவச தொலைக்காட்சியாக ஒளிபரப்பை இன்டல்சாட்17யில் தொடங்கியிருப்பது குறிப்பிடதக்கது.
அலைவரிசை விபரங்கள்:
Satellite                     Intelsat17@66.0E
Freq Rate                   3877
Symbol Rate              14300
Polar                           Horizontal
Modulation                 Mpeg4/Dvb s2
Mode                          Fta

47 சேனல்கள் மட்டும் கொண்ட சிறிலங்கா டிஷ் டிவி

sri dish47 சேனல்கள் மட்டும் கொண்ட சிறிலங்கா டிஷ் டிவி ஆரம்பம் இந்தியாவில் இரண்டு முறை கலைஞர் டிவி எடுக்கும் சுவாரஸ்யம் என்ன ஒரு கொடுமை. தேவையில்லாம அங்க போகி ஆரம்பிச்சு அங்க இருக்கவுங்களையும் சம்பாறிக்க விடாம எங்க பொளப்புலையும் கைய வச்சுட்டு 47சேனல்கள் மட்டும் ஆரம்பிச்சா என்ன நாயம்.
Sinhalese Entertainmentcolor
  • Ch No : 2506
  • Ch No : 2517
  • Ch No : 2614
  • Ch No : 2514
  • Ch No : 2516
  • Ch No : 2513
  • Ch No : 2609
  • Ch No : 2507
  • Ch No : 2511
  • Ch No : 2618
  • Ch No : 2512
  • Ch No : 2572
  • Ch No : 2572

Tamilcolor
  • Ch No : 957
  • Ch No : 971
  • Ch No : 976
  • Ch No : 951
  • Ch No : 960
  • Ch No : 907
Lifestyle/Fashioncolor
  • Ch No : 459
  • Ch No : 123
  • Ch No : 130
Devotionalcolor
  • Ch No : 2592
  • Ch No : 760
  • Ch No : 757
  • Ch No : 751
Sportscolor
  • Ch No : 2552
English Newscolor
  • Ch No : 617
  • Ch No : 618
Internationalcolor
  • Ch No : 753
  • Ch No : 674
  • Ch No : 665
  • Ch No : 564
  • Ch No : 560
  • Ch No : 986
  • Ch No : 987
  • Ch No : 994
  • Ch No : 811
  • Ch No : 218
  • Ch No : 880
  • Ch No : 935
  • Ch No : 765
  • Ch No : 986
  • Ch No : 820
  • Ch No : 780
Mixedcolor
  • Ch No : 2553


*TRC Reference No: TRC/DISH/Promo/15/01.
Pack price+ Telecommunication Levy 27.5%= Total Price
Based on the registered subscriber base of Dish TV India Limited. Logos belong to respective owners. Composition of the packages and the price thereof are subject to change without notice.
Total Channel count includes Home Channel BUZZ.