Search Blog

டிஷ் டிராக் ப்ரண்ட்ஸ் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் உடனுக்குடன் அனைத்து தொலைக்காட்சிகள் தொடர்பான தொழில்நுட்ப தகவல்களையும் தரும் முதன்மை தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்

Sep 25, 2015

பெப்பர் டிவி செயற்கைகோள் ஒளிபரப்பு புதிதாக இன்டல்சாட்17 செயற்கைகோளுக்கு மாற்றம்

நண்பர்களே தமிழகத்தின் முன்னனி பொழுது போக்கு தமிழ் தொலைக்காட்சியான பெப்பர் டிவி செயற்கைகோள் ஒளிபரப்பு தமிழ் தொலைக்காட்சிகள் சங்கமிக்கும் செயற்கைகோளான இன்டல்சாட்17க்கு மாற்றம்செய்யப்பட்டுள்ளது. பெப்பர் டிவியின் முதல் தொடக்க செயற்கைகோள் ஒளிபரப்பு இந்தியாவின் பார்த்தி டெலிஸ்பாட் நிறுவனத்தின் 
ஒளிபரப்பு முனையத்தின் முலமாக இன்டல்சாட்20 செயற்கைகோளில் தொடங்கப்பட்டு தற்சமய காலம் வரை ஒளிபரப்பாகி வந்தது.பெப்பர் டிவியின் நிகழ்ச்சிகள் என்று பார்த்தால் திரைப்படம் மற்றும் கேம் ஷோ போன்ற நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.பார்த்தி டெலிஸ்பாட் நிறுவனம் இன்டல்சாட்17 செயற்கைகோளிலும் தொலைக்காட்சிகள் ஒளிபரப்புவதற்கான அலைவரிசையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.தற்சமயம் தொடங்கப்பட்டுள்ள புதிய அலைவரிசை 
சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 முதல் அதற்கு மேற்பட்ட சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.தொலைக்காட்சியின் ஒளிபரப்பு MPEG4/DVB S2 தொழில்நுட்ப செட்டாப் பாக்ஸில் மட்டுமே கிடைக்கிறது.மேலும் இப்புதிய அலைவரிசையில் தமிழ் மற்றும் பல மொழி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பை தொடங்கலாம்.பெப்பர் டிவி ஒளிபரப்பு இலவச இன்டல்சாட்17 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.

அலைவரிசை விபரங்கள்
Satellite                  Intelsat17@66.0E(C-Band)
Freq Rate               3933
Symbol Rate          18333
Polar                       Horizontal
Modulation             Mpeg4/Dvb s2
Mode                      Fta

Sep 18, 2015

மீனாட்சி டிவி புதிய தமிழ் தொலைக்காட்சி செயற்கைகோள் ஒளிபரப்பு இன்டல்சாட்17@66 யில் ஆரம்பம்

நண்பர்களே தமிழ்நாட்டின் புதிய செயற்கைகோள் தமிழ் தொலைக்காட்சி மீனாட்சி டிவி என்ற பெயரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.இப்புதிய தமிழ் தொலைக்காட்சியின் உலகளாவீய செயற்கைகோள் ஒளிபரப்பு இன்டல்சாட்17யில் சென்னை டெலிஸ்பாட் செயற்கைகோள் ஒளிபரப்பு முனையத்தின் முலம் தொடங்கப்பட்டுள்ளது.
மீனாட்சி டிவி நிறுவனம் இந்தியாவில் தங்களது புதிய தொலைக்காட்சியை  ஒளிபரப்புவதற்கான உரிமத்தின் அனுமதியை இந்திய ஒளிபரப்பு அமைச்சகம் கடந்த வருடம் 
வழங்கியிருந்தது.மீனாட்சி டிவி தமிழ் மொழியில் 24 மணிநேர பொழுது போக்கு தமிழ் தொலைக்காட்சியாகும்.தமிழகத்தில் இவ்வருடத்தில் தொடங்கப்பட்ட இரண்டாவது தொலைக்காட்சியாகும்.தொலைக்காட்சியின் செயற்கைகோள் அலைவரிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 முதல் 8.10.12 அளவுள்ள சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.மேலும் MPEG4/DVB S2 தொழில்நுட்ப செட் டாப் பாக்ஸ்யை பயன்படுத்த 
வேண்டும்.
இத்தொலைக்காட்சிகான 24 மணி நேர ஒளிபரப்பு விரைவில் தொடங்கலாம்.தமிழகத்தில் கடந்த சில வருடங்களில் தமிழ் தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்டு வரும் நிலையில் மீனாட்சி டிவியின் நிகழ்ச்சிகள் வித்தியாசமானதாக இருக்கலாம்.மீனாட்சி டிவி முற்றிலும் இலவச தொலைக்காட்சியாக தனது முதல் ஒளிபரப்பை இன்டல்சாட்17 செயற்கைகோளில் தொடங்கியுள்ளது.
அலைவரிசை விபரங்கள்:
Satellite                Intelsat17@66.0E (C-Band)
Freq Rate              3966
Symbol Rate         14400
Polar                      Horizontal
Modulation            Mpeg4/Dvb s2
Mode                     Fta

Sep 13, 2015

ஹரிசான் டிடிஹைச் துபாய் யூட்டெல் சாட் 70பீ @ 70.5 ல் விரைவில் ஆரம்பம்

நண்பர்களே ஆசியா,ஐரோப்பா நாடுகளுக்கான புதிய டிடிஹச் சேவையை ஹரிசான் சாட் நிறுவனம் H-டிடிஹச்(துபாய்) என்ற பெயரில் யூட்டெல் சாட் 70பீ @70.5 ல் விரைவில் தனது நிரந்திர ஒளிபரப்பை ஆராம்பிக்கவுள்ளது.
இதன் ஒரு முண்ணோட்டமாக கடந்த சில மாதமாக பாலிமர்,தந்தி,டான் தமிழ் ஒளி,தீபம் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு செய்யபட்டு வருகிறது.மேலும் பல இந்திய, இலங்கை தொலைக்காட்சிகள் விரைவில் வரவிற்கின்றன...

Sep 10, 2015

இந்தியாவின் முதல் ஷாப்பிங் ஹெச்டி தொலைக்காட்சி நாப்டல் ஹெச்டி இன்சாட்4எ @ 83.0 ல் ஒளிபரப்பு ஆரம்பம்

நண்பர்களே இந்தியாவில் அதிநவின ஹெச்டி தொழில்நுட்ப தொலைக்காட்சிகள் பொழுதுபோக்கு விளையாட்டு செய்திகள் என பல்வேறு பிரிவுகளில் தொடங்கப்பட்டு வருகிறது.அந்த வரிசையில் இந்தியாவின் முன்னனி வீட்டு உபயோக பொருட்களை விற்ககூடிய நிறுவனமான நாப்டல் கடந்த வருடம் முதல் தொழில் ரீதியான தொலைக்காட்சிகளை தொடங்கி வருகிறது.
தமிழ் மலையாளம் ஹிந்தி தெலுங்கு கன்னடா போன்ற மொழிகளில் தொலைக்காட்சிகளை 
நிறுவியுள்ளனர்.
தற்சமயம் அந்நிறுவனம் அநவின தொழில்நுட்ப ஹெச்டி தொலைக்காட்சியை நாப்டல் ஹெச்டி என்ற பெயரில் தொடங்கியுள்ளனர்.இப்புதிய தொலைக்காட்சியின் ஒளிபரப்பு இந்தியாவின் இன்சாட்4எ செயற்கைகோளின் மூலம் தனது சோதனை ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் ஷாப்பிங் ஹெச்டி தொலைக்காட்சி இதுவாகும்.தொலைக்காட்சியில் 24 நேரமும் வீட்டு 
உபயோக பொருட்கள் தொடர்பான விளக்கங்கள் மற்றும் அவற்றின் விலை போன்ற விபரங்கள் தொடர்பான நிகழ்ச்சிகை வழங்குகிறது.தொலைக்காட்சியின் ஒளிபரப்பு ஹிந்தி மொழியில் தொடங்கப்பட்டுள்ளது.நாப்டல் தொலைக்காட்சியின் அலைவரிசையின் சிக்னலை பெற 8 முதல் அதற்குமேற்பட்ட சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயனபடுத்தலாம்.இலவச தொலைக்காட்சியாக இன்சாட்4எ செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.
அலைவரிசை விபரங்கள்
Satelllite              Insat4a@83.0E(C-Band)
Frequency           - 3805
Symbol Rate      - 28500
Polarity               - Horizontal
Modulation        - HD.Mpeg4/Dvb s
Mode                     - Free to air

Sep 8, 2015

பிளவர்ஸ் மலையாளம் தொலைக்காட்சி யூட்டெல்சாட்70பீ@70.5 ல் ஆரம்பம்

நண்பர்களே மலையாள மக்களின் மனம் கவர்ந்த பிளவர்ஸ் தொலைக்    காட்சி  யூட்டெல் சாட் 70பீ@70.5  செயற்கைகோலில் இன்று முதல் தனது ஒளிபரப்பை தொடங்கி யுள்ளது.
மிக எளிதான இதன் சிக்னலை 60 மற்றும் 90 செ.மீ Ku band டிஷ் ஆண்டெனா மூலம் 62 நாடுகளில் இலவச செட் டாப் பாக்ஸ் மூலம் கண்டுகளிக்கலாம்.    
                                                                       
அலைவரிசை  விபரங்கள் :                    
Satellite - Eutelsat70b@70.5 deg kuband
Frequency - 11355.                                    
Symbol Rate - 44900.                                  
Polarity - Vertical.                                        
Modulation - Mpeg4/dvb s2.                    
 Mode - Free to air

Sep 5, 2015

தீபம் தமிழ் தொலைக்காட்சி லண்டன் யூட்டெல் சாட் 70 பி ல் ஆரம்பம்

 நண்பர்களே குறுகிய  காலத்தில் இலங்கை சேனலில் ஆரம்பம் செய்து அடுத்து இந்தியாவின்   சேனல்களை  ஆகிரமைத்து ,
இப்பொழுது லண்டன் வரை சென்று பட்டைய கிளப்பும் யூட்டெல் சாட் 70 பி டிகிரி செயற்க்கைகோள்  நான் ஏற்கனவே கூறியது போன்று இந்த சேட் லைட் சிக்னல் கிடைக்கும் அனைத்து நாட்டு சேனல்களும் விடப்படுமாயின் உலகிலேயே இது தான் முதலிடம் பிடிக்கும் என்றேன் அது நிஜமாகும்.
நேற்று முதல் தீபம் தொலைக்காட்சி  தனது சேனலை இந்த செயற்க்கைகோளில் இணைத்துள்ளது.                                                                                                                                                                              
அலைவரிசை விபரங்கள்
Satellite                    Eutelsat70B@70.5E(Ku-band)
Freq Rate                 11355
Symbol Rate             44900
Polar                        Vertical
Modulation                Mpeg4/Dvb s2
Mode                        Fta