Search Blog

டிஷ் டிராக் ப்ரண்ட்ஸ் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் உடனுக்குடன் அனைத்து தொலைக்காட்சிகள் தொடர்பான தொழில்நுட்ப தகவல்களையும் தரும் முதன்மை தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்

Nov 28, 2015

மேற்கித்திய நாடுகளுக்கான டிடி பொதிகை தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு ஆப்ரிக்காசாட்1எ செயற்கைகோளில் தொடக்கம்

நண்பர்களே ஆப்ரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் வாழும்இந்தியா்கள் கானும் வகையில் இந்திய அரசின் துர்தர்ஷன்தொலைக்காட்சிகளில் டிடி பொதிகை தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு முதன்முறையாகஆப்பிரிக்கா நாட்டின்ஆப்ரிக்காசாட்1எசெயற்கைகோளில்தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக விளங்கும் பொதிகை  தொலைக்காட்சியின் ஒளிபரப்பு கடந்த சில வருடங்களுக்கு முன்பு அம்ஸ்5 செயற்கைகோளின் முலம் ஆப்பிரிக்கா நாடுகளில் ஒளிபரப்பு தொடங்கப்பட்டது.தற்சமயம் இத்தொலைக்காட்சியின் புதிய  ஒளிபரப்பு  ஆர் ஆர் சாட் செயற்கைகோள் ஒளிபரப்பு முனையத்தின் முலம் ஆப்ரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு தொடங்கப்பட்டுள்ளது.இதன் அலைவரிசையில் டிடி சப்தகிரி டிடி உருது டிடி சகயடிரி போன்ற தொலைக்காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
தொலைக்காட்சியின் 
அலைவரிசை சிக்னலை இந்தியாவில் பெற குறைந்தபட்சம் 10 முதல் 12 அளவுள்ள சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.மேலும் அதிநவின செட்டாப் பாக்ஸ்யை பயன்படுத்த வேண்டும்.அனைத்து தொலைக்காட்சிகளும் இலவச ஒளிபரப்பாக ஆப்பிரிக்காசாட்1எ செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.ஆப்பிரிக்கா மற்றும் வளைகுடா ஐரோப்பா நாடுகளில் உள்ள தமிழ்ர்கள் பொதிகை தொலைக்காட்சியினை காண குறைந்தபட்சம் 8 அடி சிபேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.
அலைவரிசை விபரங்கள் :
Satellite                 Africasat1A@46.0E (C-Band)
Freq Rate              3732
Symbol Rate         30000
Polar                      Vertical
Modulation            Mpeg4/Dvb s2
Mode                     FTA

Nov 21, 2015

துர்தர்ஷன் குழும தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு புதிய செயற்கைகோளான ஜிசாட்10@83.0Eயில் தொடக்கம்

நண்பர்களே இந்திய அரசின் பொது தொலைக்காட்சி சேவையான பிரசார் பாரதியின் டிடி நேஷனல் டிடி ஹெச்டி டிடி நியூஸ் டிடி ஸ்போர்ட்ஸ் டிடி பாரதி டிடி கிஷான் மற்றும் சில டிடி தொலைக்காட்சிகளின் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு புதிய செயற்கைகோளான ஜிசாட்10யில் தொடங்கியுள்ளது.சில மாதங்களுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்ட இப்புதிய செயற்கைகோளில் இந்தியா அரசின் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு 
தொடங்கப்பட்டுள்ளது.இத்தொலைக்காட்சிகள் அனைத்தும் இன்சாட்3எ செயற்கைகோளில் ஒளிபரப்பை வழங்கி வந்தநிலையில் அச்செயற்கைகோளின் பயன்பாடு முடிவடையும் நிலையில் இப்புதிய செயற்கைகோளுக்கு தொலைக்காட்சிகள் அனைத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதே அலைவரிசையில் சோதனை ஒளிபரப்பை அந்தமான் தீவுகளுக்கான டிடி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு தொடங்கப்பட்டு இடைநிறுத்தம் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.தற்சமயம் 
தொடங்கப்பட்டுள்ள புதிய அலைவரிசையின் சிக்னல் 6 முதல் 16 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவில் கிடைக்கும்.மேலும் எளிய தொழில்நுட்ப வசதியுடைய MPEG2/DVB S1 செட் டாப் பாக்ஸ்யில் தொலைக்காட்சிகளை காணலாம்.விரைவில் மற்ற மாநில மொழி டிடி தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பும் ஜிசாட்10 செயற்கைகோளில் தொடங்கலாம்.இப்புதிய ஒளிபரப்பு வளைகுடா மற்றும் கிழக்காசியா போன்ற நாடுகளுக்கும் கிடைக்கும்.துர்தர்ஷனின் அதிநவின தொலைக்காட்சியான டிடி ஹெச்டிம் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.
அலைவரிசை விபரங்கள்
Satellite                       GSAT10@83.0E(C BAND)
Freq Rate                     3885
Symbol Rate                27500
Polar                            Vertical
Modulation                  Mpeg2/Dvb s1
Mode                            FTA

D2H லைப் 4கே(D2H LIFE UHD 4K) புதிய அல்ட்ர யூஹெச்டி தொலைக்காட்சி ஒளிபரப்பு ST2@88.0E தொடக்கம்

நண்பர்களே இந்தியாவின் மிக பிரபலமான டிடி ஹெச் சேவையான வீடியோகான் டிடிஎச் நிறுவனம் முதன்முறையாக இந்தியாவிற்கான அதிநவின தொலைக்காட்சியான D2H லைப்  அல்ட்ரா ஹெச்டி 4கே என்ற பெயரில் தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்கியுள்ளனர்.இந்தியாவில் அல்ட்ரா ஹெச்டி தொலைக்காட்சி தொடங்கிய முதல் டிடிஎச் நிறுவனம்
இதுவாகும்.தற்சமயம் இலவச ஒளிபரப்பாக எஸ்டி2 செயற்கைகோளில் ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.மிக தெளிவான விடியோ மற்றும் ஆடியோ தரத்தில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.இந்தியாவை பொருத்தமட்டிலும் கடந்த வருடம் முதல் சில முன்னனி தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்களின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு என்று புதிய ஹெச்டி தொலைக்காட்சிகளை தொடங்கி வருகின்றனர்.அவ்வரிசையில் டிடிஎச்
நிறுவனங்கள் புதிய தொழில்நுட்ப தொலைக்காட்சிகளை நிறுவனங்களின் சார்பாக தற்சமய காலங்களில் தொடங்கி வருவது குறிப்பிடதக்கது.D2H லைப் 4கே தொலைக்காட்சி தற்காலிக சோதனை ஒளிபரப்பின் அடிப்படையில் இலவச ஒளிபரப்பாக தொடங்கப்பட்டுள்ளது.எவ்வித நேரங்களிலும் கட்டண  தொலைக்காட்சியாக  மாற்றப்படலாம்.
அலைவரிசை விபரங்கள்:
Satellite                 ST2@88.0E(KU BAND)
Freq Rate               11483
Symbol Rate          44997
Polar                      Horizontal
Modulation            HEVC/UHD MPEG4/DVB S2
Mode                     FTA

Nov 15, 2015

ஆசியாவின் முதல் தமிழ் அல்ட்ரா ஹெச்டி தொலைக்காட்சி ஒளிபரப்பு யூடெல்சாட்70B@70.5Eயில் உதயம்

நண்பர்களே தமிழ் தொலைக்காட்சியில் முதன்முறையாக அதிநவின தொழில்நுட்ப வசதியுடைய அல்ட்ரா ஹெச்டி வடிவில் புதிய தமிழ் தொலைக்காட்சி சோதனை ஒளிபரப்பை தற்காலிக அடிப்படையில் ஜெர்மனி நாட்டின் ஹெரிஜான் தொலைக்காட்சி ஒளிபரப்பு செயற்கைகோள் முனையத்தின் முலம் யூடெல்சாட்70பி செயற்கைகோளில் தொடங்கியுள்ளனர்.ஆசியாவில் முதன்முறையாக தமிழ் நிகழ்ச்சிகளை 
வழங்ககூடிய அதிநவின தொழில்நுட்ப அல்ட்ரா ஹெச்டி தொலைக்காட்சியை தொடங்கியுள்ளது வரவேற்க்கதக்கது.தற்சமயம் ஒரு குறிப்பிட்ட திரைப்பாடல்களுடன் நிகழ்ச்சிகளை வழங்கிவருகிறது.ஜெர்ரி அல்ட்ரா ஹெச்டி ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பாக தொடங்கப்பட்டுள்ளது.யூடெல்சாட்70 செயற்கைகோளில் தற்சமயம் மூன்று அல்ட்ரா தொலைக்காட்சிகளை தொடங்கியுள்ளனர்.இத்தொலைக்காட்சிகளை 
காண அதிநவின வசதியுடைய அல்ட்ரா ஹெச்டி செட் டாப் பாக்ஸ் பயன்படுத்த வேண்டும்.இத்தொலைக்காட்சி வளைகுடா.ஆசியா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கான பிரத்தியோக சோதனை ஒளிபரப்பு தொலைக்காட்சியாகும்.இலவச தொலைக்காட்சியாக தமிழ் அல்ட்ரா ஹெச்டி யூடெல்சாட்70பியில் ஒளிபரப்பாகிறது.முதன்முறையாக அல்ட்ரா ஹெச்டி தொலைக்காட்சி படதொகுப்புகள் நமது டிஷ் டிராக் ப்ரண்ட்ஸ்  தமிழ் இணையதளத்தில்.
அலைவரிசை விபரங்கள்:
Satellite               Eutelsat70B@70.5E(KU-Band)
Freq Rate            11355
Symbol Rate       45000
Polar                   Vertical
Modulation         UHD/MPEG4/DVB S2
Mode                   FTA

Nov 9, 2015

பாக்ஸ் ஆக்ஸன் மூவிஸ் ஹெச்டி ஆங்கில திரைப்பட தொலைக்காட்சி இலவச ஒளிபரப்பு ஆசியாசாட்5@100.5E

நண்பர்களே பாக்ஸ் எண்டர்டெய்ன்மென்ட் சேனல்ஸ் நிறுவனத்தால் தெற்காசிய மற்றும் சீனா போன்ற நாடுகளுக்காக தொடங்கப்பட்ட ஆங்கில அதிரடி திரைப்பட தொலைக்காட்சியான பாக்ஸ் ஆக்ஸன் மூவிஸ் ஹெச்டி தற்காலிக இலவச தொலைக்காட்சியாக ஆசியாசாட்5 செயற்கைகோளில் 
ஒளிபரப்பாகிறது.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள் அனைத்தும் எவ்வித விளம்பர இடைவெளியின்றி ஒளிபரப்பாகிறது.அனைத்து பகுதிகளிலும் தொலைக்காட்சியின் செயற்கைகோள் அலைவரிசை சிக்னல் 6 மற்றும் 12 அளவுள்ள சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவில் கிடைக்கிறது.இத்தொலைக்காட்சியின் இலவச ஒளிபரப்பு எவ்வித நேரங்களிலும் இடைநிறுத்தம் செய்யலாம்.மிக துல்லியமான வீடியோ மற்றும் ஆடியோ தரத்தில் திரைப்படங்கள் ஒளிபரப்பாகிறது.

அலைவரிசை விபரங்கள்
Satellite                 Asiasat5@100.5E(C-Bnad)
Freq Rate              4040
Symbol Rate         29720
Polar                     Horizontal
Modulation           HD.Mpge4/Dvb s2
Mode                     Fta/Pay