Search Blog

டிஷ் டிராக் ப்ரண்ட்ஸ் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் உடனுக்குடன் அனைத்து தொலைக்காட்சிகள் தொடர்பான தொழில்நுட்ப தகவல்களையும் தரும் முதன்மை தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்

Dec 14, 2015

பிரசார் பாரதி டிடி தொலைக்காட்சி ஒளிபரப்பு புதிய செயற்கைகோள் இன்சாட்4பி@93.5ல் ஆரம்பம்

நண்பர்களே இந்தியா அரசு பொது ஒளிபரப்பு தொலைக்காட்சி நிறுவனமான பிரசார் பாரதியின் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு புதிய செயற்கைகோளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தென்னிந்திய தொலைக்காட்சிகளான டிடி பொதிகை.டிடி மலையாளம்.டிடி யாதகிரி.டிடி சப்த கிரி.டிடி கன்னடா மற்றும் டிடி லக்னோ டிடி பீகார் போன்ற தொலைக்காட்சிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இத்தொலைக்காட்சிகள் அனைத்தும் கடந்த பல வருடங்களாக இன்சாட்3எ செயற்கைகோளின் முலம் ஒளிபரப்பை ஆசியா நாடுகளுக்கு ஒளிபரப்பாகி வந்தது.இனி வரும் காலங்களில் அனைத்து டிடி 
தொலைக்காட்சிகளும் இன்சாட்4பி செயற்கைகோளின் முலம் ஒளிபரப்பை வழங்கும். தொலைக்காட்சியின் அலைவரிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 8 முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.மேலும் முன்பு ஒளிபரப்பாகி வந்த MPEG2/DVB S1 தொழில்நுட்ப செட் டாப் பாக்ஸ்யில் காணலாம்.இம்மாற்றம் கேபிள் மற்றும் டிடி எச் ஆப்ரேட்டர்களுக்கு மட்டுமே.இந்தியாவை தவிர மாற்ற நாடுகளில் டிடி டிவியினை காண 10 மேற்பட்ட டிஷ் ஆன்டானவை பயன்படுத்த வேண்டும்.
ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் பொதிகை டிவியின் ஒளிபரப்பு ஆம்ஸ்5@17.0E செயற்கைகோளில் இருந்து ஆப்ரிக்காசாட்1எ@46.0Eக்கு கடந்த மாதத்தில் ஒளிபரப்பு மாற்றம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடதக்கது.
அலைவரிசை விபரங்கள்
Satellite                 Insat4B@93.5E(C-Band)
Freq Rate              4050
Symbol Rate         8600
Polar                     Horizontal
Modulation           Mpeg2/Dvb s
Mode                    FTA

Dec 8, 2015

இலங்கையின் முதல் தமிழ் ஹெச்டி தொலைக்காட்சியாக உதயம் டிவி(UDAYAM TV HD TAMIL) ஹெச்டி ஒளிபரப்பு விரைவில்

 நண்பர்களே இலங்கை நாட்டின் தமிழ் மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக திகழகூடிய பிரதான தமிழ் தொலைக்காட்சி வரிசையில் புதிய தொலைக்காட்சிகள்  கடந்த சில வருடங்களாக தொடங்கப்பட்டு வருகிறது.இலங்கை கிழக்கு மாகணாத்தை தலைமையிடமாக கொண்டு கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட தமிழ் தொலைக்காட்சியே உதயம் டிவி.இத்தொலைக்காட்சியின் பிரதான ஒளிபரப்பு எஸ்டி2


செயற்கைகோள் யுடாக சில மாதங்கள் இலங்கை மற்றும் ஆசியா நாடுகளுக்கு ஒளிபரப்பு வழங்கியது.பின்பு நாட்டில் நடைபெற்ற யுத்த நடவடிக்கைகளுக்கு பின்பு இடைநிறுத்தம் செய்யப்பட்டது.தற்சமயம் இலங்கையின் அதிநவின தொழில்நுட்பம் கொண்ட முதல் தமிழ் ஹெச்டி தொலைக்காட்சியாக உதயம் டிவி ஹெச்டி தொடங்கப்படவுள்ளது.இலங்கையில் தமிழ் தொலைக்காட்சிகள் அனைத்தும்
செயற்கைகோள் ஒளிபரப்பு அல்லாது தரைவழி மற்றும் இணையதளம் வயிலாக ஒளிபரப்பாகி வருகிறது.உதயம் டிவியின் பரிசார்ந்த ஒளிபரப்பு விரைவில் இலங்கையின் யுஹெச் எப் மற்றும் பியோ டிவி.டயலாக் டிவி போன்றவற்றின் முலம் தொடங்கப்படவுள்ளது.உதயம் டிவி இலங்கையின் பொழுதுபோக்கு தமிழ் ஹெச்டி தொலைக்காட்சியாக வலம் 
வரயிருக்கிறது.
உதயம் தொலைக்காட்சியின் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு விரைவில் தொடங்கலாம்.உலகில் வாழும் தமிழ் மக்களின் பொழுதுபோக்கு வரிசையில் அதிநவின தொழில்நுட்ப தொலைக்காட்சிகளை மலேசியா நாட்டில் ஆஸ்ட்ரோ விண்மீன் ஹெச்டி மற்றும் கனடா நாட்டில் மின்னல்டிவி ஒளிபரப்பாகி வருகிறது.இந்தியாவில் சன் டிவி குழுமம் மட்டும் ஹெச்டி தொலைக்காட்சிகளை ஒளிபரப்பி வருகிறது.

Dec 4, 2015

ஜெயா டிவி குழுமத்தின் தமிழ் தொலைக்காட்சிகள் இலவச ஒளிபரப்பு இன்டல்சாட்20யில்

நண்பர்களே தமிழகத்தின் முன்னனி தமிழ் தொலைக்காட்சியான ஜெயா டிவி குழுமத்தின் தொலைக்காட்சிகளான ஜெயா டிவி.ஜெயா ப்ளஸ்.ஜெயா மூவிஸ் மற்றும் ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சிகள் தற்காலிக இலவச ஒளிபரப்பின் 
அடிப்படையில் அந்நிறுவனத்தின் உலகளாவிய செயற்கைக்கோள் இன்டல்சாட்20 அலைவரிசையில் ஒளிபரப்பாகிறது.இத்தொலைக்காட்சிகள் அனைத்து கட்டண தொலைக்காட்சிளாக தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
இத்தொலைக்காட்சிகளின் இலவச ஒளிபரப்பு 
மாற்றத்திற்குட்பட்டது.தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு மிக தெளிவான வீடியோ மற்றும் ஆடியோவில் அமைந்துள்ளது.தொலைக்காட்சிகள் அனைத்தும் மாவீஸ் மீடியா நிறுவனத்தின் ஒளிபரப்பு முனையத்தின் முலம் இந்தியாவில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.விரைவில் 24 மணி நேர நிகழ்ச்சிகள் தொடங்கப்படும்.
அலைவரிசை விபரங்கள்;
Satellite                    Intelsat20@68.5E(C-BAND)
Freq Rate                 4130
Symbol Rate            10370
Polar                        Vertical
Modulation               Mpeg4/Dvb s1
Mode                       PAY/FTA  

Dec 3, 2015

சன் டிவி ரெஸ்ட் ஆப் இந்தியா தமிழ் தொலைக்காட்சி சோதனை ஒளிபரப்பு இன்டெல்சாட்17@66 ல் ஆரம்பம்

சன் டிவி ரெஸ்ட் ஆப் இந்தியா தமிழ் தொலைக்காட்சி சோதனை ஒளிபரப்பு இன்டெல்சாட்17@66 ல் ஆரம்பம்.முதன் முதலாக படதொகுப்புகள் நமது டிஷ் டிராக் ப்ரண்ட்ஸ் தமிழ் இணையதளத்தில்.
TP : 3925 V 30000 Mpeg 4 Dvbs2 8 PSK.

Dec 2, 2015

பூம்ரிங் மற்றும் டூனாமி கார்டூன் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு தாய்காம்6@78.5யில் தொடக்கம்

நண்பர்களே தாய்லாந்து நாட்டின் தொலைக்காட்சி ஒளிபரப்பு செயற்கைகோளான தாய்காம்6யில் தாய்லாந்து நாட்டின் பிஎஸ்ஐ நிறுவன தொலைக்காட்சி ஒளிபரப்பு அலைவரிசையில் உலகின் முன்னனி புதிய கார்டூன் தொலைக்காட்சிகளான பூம்ரிங் மற்றும் டூனாமி ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இத்தொலைக்காட்சிகள் இரண்டும் கட்டண 
தொலைக்காட்சிகளாக தாய்காம்6யில் ஒளிபரப்பாகிறது.உலகின் மிக பிரபலமான கார்டூன் நிகழ்ச்சிகளை வழங்குகிறது இவ்விரு தொலைக்காட்சிகளும்.இத்தொலைக்காட்சியின் அலைவரிசை சிக்னலை தென்இந்தியாவில் பெற குறைந்தபட்சம் 4 முதல் 6 அடி வரையிலான கேயூ டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.தாய்லாந்து மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளில் அலைவரிசை சிக்னலை பெற 60 செமீ முதல் 120 வரையிலான டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.
அலைவரிசை விபரங்கள்:
Satellite                Thaicom6@78.5E(KU-Band)
Freq Rate              12730
Symbol Rate         30000
Polar                     Vertical
Modulation           Mpeg2/Dvb s1
Mode                    Pay/Biss